தமிழ்நாடு

tamil nadu

மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட ஆப்கன் விக்கெட் கீப்பருக்கு 6 ஆண்டுகள் தடை

By

Published : May 11, 2020, 4:49 PM IST

ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறி நடந்துகொண்டதால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ஷபியுல்லா ஷபிக்கிற்கு அனைத்து விதமான போட்டிகளில் விளையாட ஆறு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Afghanistan's Shafiqullah Shafaq banned from all forms of cricket for six years
Afghanistan's Shafiqullah Shafaq banned from all forms of cricket for six years

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ஷபியுல்லா ஷபிக் 2009ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இவர் 2018இல் ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடரிலும், 2019இல் வங்கதேச ப்ரீமியர் லீக் தொடரிலும் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆப்கன் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறியதால் அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு அலுவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சூதாட்ட தரகர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

இந்த நிலையில், தன் மீது பதிவுசெய்யப்பட்ட புகார்களையும் அவர் ஏற்றுக்கொண்டதால் அவருக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆறு ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 30 வயதான இவர் இதுவரை ஆப்கானிஸ்தான் அணிக்காக 24 ஒருநாள், 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முறையே 430, 494 ரன்களை அடித்துள்ளார்.

இதையும் படிங்க:கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடமல் பும்ரா ஓய்வெடுக்க வேண்டும்' - வாசிம் அக்ரம்

ABOUT THE AUTHOR

...view details