தமிழ்நாடு

tamil nadu

"உங்கள் கோபத்தை நியாயமான பிரச்சினைகளை நோக்கி திருப்புங்கள்".. கிளென் மேக்ஸ்வெல் மனைவி வினி ராமன் பதிலடி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 10:40 PM IST

இந்திய அணியின் ரசிகர்கள் சிலர் அனுப்பிய வெறுக்கத்தக்க மெஸ்சேஜ்களுக்கு கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன் பதிலடி கொடுத்துள்ளார்.

glenn maxwell
glenn maxwell

சென்னை: உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்வியால் அதிர்ச்சியடைந்த ரசிகர்களில் சிலர் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமனுக்கு வெறுக்கத்தக்க மெஸ்சேஜ்களை அனுப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.

அவருக்கு, இந்தியாவை சேர்ந்த நீங்கள் இந்தியாவின் தோல்வியை கொண்டாடுகிறீர்கள் என சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மெஸ்சேஜ்கள் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியதாவது; "இதை சொல்ல வேண்டிய தருனம் வந்திருப்பதை நம்ப முடியவில்லை. நீங்கள் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு ஆதரவாக இருக்கும் அதேசமயம், உங்கள் குழந்தையின் தந்தையாக இருக்கும் உங்கள் கனவரின் அணிக்கும் அதரவாக இருக்க வேண்டும். உங்களின் சீற்றத்தை உலகில் நடைபெறும் முக்கிய பிரச்னைகளை நோக்கி திருப்புங்கள் இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையை காலுக்கு கீழ் வைத்தவாறு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி சர்ச்சை ஏற்ப்படுத்திய நிலையில், அதே அணியை சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி அதாவது இந்தியாவை பூர்விகமாக கொண்ட வினி ராமனுக்கு ரசிகர்கள் மெஸ்சேஜ் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:"அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை.."- ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன்!

ABOUT THE AUTHOR

...view details