தமிழ்நாடு

tamil nadu

முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவிய உலகச் சாம்பியன் பி.வி. சிந்து!

By

Published : Dec 11, 2019, 11:54 PM IST

சீனா: வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ் பேட்மின்டன் தொடரின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

PV sindhu BWF WC opener
PV sindhu BWF WC opener

உலக பேட்மின்டன் கூட்டமைப்பின் மூலம் நடத்தப்படும் வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ் பேட்மின்டன் தொடர் இந்தாண்டு சீனாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி. சிந்து, ஜப்பானின் அகானே யமகுச்சியை(Akane Yamaguchi) எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சிந்து 21-18 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி அகானேக்கு அதிர்ச்சியளித்தார். அதனைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அகானே இரண்டாவது செட்டை 21-18 எனவும், மூன்றாவது செட்டை 21-08 என்ற கணக்கிலும் கைப்பற்றி சிந்துவிற்கு அதிர்ச்சியளித்தார்.

இதன் மூலம் வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்திலேயே நடப்பு உலக சாம்பியனான பி.வி. சிந்து 21-18, 18-21, 08-21 என்ற செட் கணக்குகளில் ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் போராடி தோல்வியடைந்தார்.

இதையும் படிங்க: 400 சிக்சர்களை விளாசி ரோஹித் புதிய சாதனை!

PV sindhu BWF WC opener


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details