தமிழ்நாடு

tamil nadu

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய பிவி சிந்து!

By

Published : Mar 26, 2020, 2:46 PM IST

ஹைதராபாத்: கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.

pv-sindhu-donates-rs-10-lakh-in-fight-against-covid-19
pv-sindhu-donates-rs-10-lakh-in-fight-against-covid-19

இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்தே இருக்கிறது. இதுவரை 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு உத்தரவால் தினக்கூலிகள், ஆதரவற்றோர், அடிதட்டு மக்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் சினிமா நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் உதவி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஆந்திர மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர்கள் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம் என மொத்தமாக ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். இவரைப்போலவே டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஏழை எளியோருக்கு உதவும் வகையில் அனைவருக்கும் உணவளிக்க நிதி திரட்டி வருகிறார்.

இதையும் படிங்க:கரோனா நெருக்கடிக்கு 2 கோடி நிதியுதவி அளித்த பவர் ஸ்டார்!

ABOUT THE AUTHOR

...view details