தமிழ்நாடு

tamil nadu

'என் பாடல் வரிகளை மாற்றி எனக்கே அனுப்புகின்றனர்' - வைரமுத்து

By

Published : Feb 17, 2021, 12:12 PM IST

'எனது பாடல் வரிகளை மாற்றி எனக்கே அனுப்புகின்றனர்' என்று கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். வைரமுத்துவின் இந்த திடீர் ட்வீட்க்கு பெட்ரோல் விலை தான் காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

கவிஞர் வைரமுத்து ட்வீட்
கவிஞர் வைரமுத்து ட்வீட்

நாட்டில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்று லிட்டருக்கு 91 ரூபாய் 68 காசுகளாக விற்பனை செய்யப்படும் பெட்ரோல் விலை இன்னும் சில தினங்களில் சதமடித்து விடும் போல் உள்ளது. அத்தியாவாசிய பொருள்களின் விலை ஜெட் வேகத்தில் உயர்வதால் அடித்தட்டு மக்கள் வேதனையில் உள்ளனர். இதற்கு ஒருபக்கம் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மறுபக்கம் நெட்டிசன்களும் இந்த விலை ஏற்றத்தை கண்டித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். குறிப்பாக இயற்கை படத்தில் வரும் காதல் வந்தால் சொல்லி அனுப்பு பாடல் வரிகளை மாற்றி 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு, பெட்ரோல் இருந்தால் வருகிறேன்' என்று கிண்டல் செய்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்து ட்வீட்

இந்நிலையில் இப்பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், "எனது பாடல் வரிகளை மாற்றி எனக்கே அனுப்பியுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார். ஐந்தாயிரத்து 800க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி கவிப்பேரரசு அடைமொழி பெயரை தனதாக்கி கொண்ட வைரமுத்துவிற்கு நெட்டிசன்களின் இந்தச் செயல் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க; தமிழர்களின் ஆதி ஆயுதம் வேல் - வைரமுத்து!

ABOUT THE AUTHOR

...view details