தமிழ்நாடு

tamil nadu

பிக் பாஸ் 4 - கேப்ரில்லாவை முதுகில் சுமந்த சுரேஷ்!

By

Published : Oct 16, 2020, 1:41 PM IST

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் இன்றைக்கான எபிசோட்டில் கேப்ரில்லாவை, சுரேஷ் முதுகில் சுமந்து தனது ஆதரவை வெளிக்காட்டியுள்ளார்.

கேப்ரில்லா
கேப்ரில்லா

’பிக் பாஸ் 4’ நிகழ்ச்சியில் இன்றைக்கான எபிசோட்டில் முன்று போட்டியாளர்களை, அதிக நேரம் சுமந்து நிற்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது கேப்ரில்லாவை -சுரேஷும், ரியோவை பாலாஜியும், வேல்முருகனை ஆரியும் சுமந்து நிற்கின்றனர். இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், கேப்ரில்லாவை- சுரேஷ் சிரமப்பட்டு முதுகில் சுமந்து நிற்க, அவர் உடல் முழுவதும் வியர்வை வழிகிறது. இதை ஏற்க மறுத்த கேப்ரில்லா போட்டியிலிருந்து விலகி கொள்கிறார். பிறகு தனக்காக சிரமப்பட்ட சுரேஷை கட்டிபிடித்து அழுவது போல் ப்ரோமோ வீடியோ முடிகிறது.

கடந்த சில தினங்களாக சுரேஷ் மீது ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்றைய எபிசோட் மூலம் அவருக்கு நல்ல பெயர் உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:ஷிவானியை கண்ணாடி கூண்டுக்குள் அடைத்த போட்டியாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details