தமிழ்நாடு

tamil nadu

பிக்பாஸ் இஸ் பேக்... சீசன் 4 ஆரம்பம்!

By

Published : Oct 4, 2020, 6:02 PM IST

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 இன்று ஆரம்பாகவுள்ளதால் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

bb
bb

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 இன்று (அக்டோபர் 4) தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால், இதற்கு ஒரு தனி மவுசும் மக்கள் மத்தியில் உண்டு. இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்ற அறிவிப்பு வெளியானதுமே, வதந்திகள் பரவத் தொடங்கின. ஒரு பக்கம் இவர்கள் தான் போட்டியாளர்கள் என வீடியோ போடும் யூடியூப் சேனல்களும், மற்றொரு பக்கம் எப்படா ஒளிபரப்பு செய்வாங்க மீம் போட்டு கலாய்க்கலாம் என மீம் கிரியேட்டர்ஸும் காத்திருக்கிருக்கின்றனர்.

கரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் பிக் பாஸ் வீட்டில் இந்தாண்டு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று, தனியார் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன. இதை பார்த்த பலரும் பிரமாண்டத்திற்கு பஞ்சம் இல்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். வீட்டைப் பார்க்கும் போதே ஒரு விதமான ஈர்ப்பை ஏற்படுத்தும் வண்ணங்களால் பிக்பாஸ் வீடு நிறைந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்கள் கரோனா விதிமுறைப்படி 14 நாள்கள் நட்சத்திர விடுதியில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு தனிமையில் இருப்பவர்கள் அவ்வப்போது பதிவிடும் புகைப்படங்களை வைத்தே இவர்கள் தான் போட்டியாளர்கள் என மக்கள் கணித்து வருகின்றனர்.

கரோனா தொற்றின் காரணமாக பிக்பாஸ் போட்டிக்கு பார்வையாளர்கள் இருக்கமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி இந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாள்கள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எப்போதும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பியில் முதலில் இருக்கும் அந்த தனியார் தொலைக்காட்சிக்கு இந்தாண்டு சறுக்கல் ஏற்படலாம். ஏனென்றால், கரோனா தொற்றின் காரணமாக தள்ளிச்சென்ற ஐபிஸ் தொடர் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, எதை பார்க்கலாம் என்ற குழப்பம் கிரிக்கெட் பிரியர்களிடமும், ரியாலிட்டி ஷோ பிரியர்களிடமும் ஏற்படும். பிக்பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பிப்பதற்கு முன்னரே நமது வீட்டு டிவியில் எந்த சேனல் வைக்க வேண்டும் என்று சண்டை வந்துவிடும் போல!.

ABOUT THE AUTHOR

...view details