தமிழ்நாடு

tamil nadu

நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள்...மருத்துவமனையில் இருந்து அட்வைஸ் தரும் பாத்திமா பாபு

By

Published : Jun 28, 2021, 7:21 PM IST

சென்னை: பிரபல செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Fathima babu
Fathima babu

தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் பாத்திமா பாபு. இவர் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சில தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் சீசன் 3' இல் போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டு ரசிகர்களிடையே தனி கவனத்தைப் பெற்றார்.

பாத்திமா பாபுவுக்கு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ஜூன் 26ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரகத்தில் கற்களுக்காக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இதுகுறித்து பத்திமா பாபு தனது சமூகவலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், "கடந்த வாரம் கீழ் முதுகில் பெரும் வலி ஏற்பபட்டது. அப்போது மருத்துவமனை சென்று சோதித்து பார்த்தப்போது சிறுநீரகத்தில் பெரிய கல் இருந்தன் காரணமாக வலி ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனே இதற்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறினர். இதனையடுத்து தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது நலமாக இருக்கிறேன்.

மருத்துவமனையில் பாத்திமா பாபு

இந்த வீடியோ பார்க்கும் ஒவ்வொருவரும் தயவு செய்து அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். நான் படப்பிடிப்புகளுக்கு செல்லும் போது பெரும்பாலும் கழிப்பறை வசதிகள் சற்று தொலைவில் இருக்கும். இதனால் நான் இயற்கை உபாதை அடக்கி கொண்டேன். அதன் விளைவுதான் இந்த கல் அடைப்பு. அதனால் நீங்கள் தினமும் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இஸ்லாமியர்களின் நண்பராக மோடி இருக்கிறார்: பாத்திமா பாபு புகழாரம்...!

ABOUT THE AUTHOR

...view details