தமிழ்நாடு

tamil nadu

கரோனா அச்சுறுத்தல்: டிஜிட்டல் வழியாக நடைபெறும் பி எஃப் ஐ லண்டன் திரைப்பட விழா

By

Published : Jul 3, 2020, 1:08 PM IST

கரோனா தொற்று பரவிவரும் நிலையில் பி எஃப் ஐ லண்டன் திரைப்பட விழா (BFI London Film Festival ) வரும் அக்டோபர் மாதம் இணையதளம் வாயிலாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BFI London Film Festival to go on virtual
BFI London Film Festival to go on virtual

கரோனா தொற்று காரணமாக பல திரைப்பட விழாக்களும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. சில திரைப்பட விழாக்கள் டிஜிட்டல் தளம் வாயிலாக நடக்க இருக்கின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் பிஎஃப்ஐ லண்டன் திரைப்பட விழாவானது (BFI London Film Festival) ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது. இந்தத் திரைப்பட விழாவானது கரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் அக்டோபர் 7ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்தத் திரைப்பட விழாவில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நேரடியாக டிஜிட்டல் தள வாயிலாக வெளியாக இருக்கின்றன. ஒவ்வொரு திரைப்படத்தின் திரையிடலுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கேள்வி-பதில் சுற்றுகளும் நடைபெறும்.

இப்படி டிஜிட்டல் தளம் வாயிலாக திரையிடல் நடக்கும்போது பலருக்கும் இலவசமாக உரையாடலில் பங்குபெரும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இதுகுறித்து இயக்குநர் ட்ரிசியா டட்டில் கூறுகையில், "கரோனா தொற்று காரணமாக உலகம் எங்கும் நடக்கும் நேரடி நிகழ்வுகளைப் போலவே, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும் நாங்கள் எங்கள் திட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க...யூ டியூப்பில் ஒளிபரப்பாகும் உலகின் முக்கிய திரைப்பட விழாக்கள்

ABOUT THE AUTHOR

...view details