தமிழ்நாடு

tamil nadu

என்னது விஜய் பிக்பாஸ் பார்ப்பாரா? வைல்டு கார்டு என்ட்ரியால் வெளியான தகவல்

By

Published : Nov 25, 2021, 2:01 PM IST

பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் மூன்றாவது வைல்டு கார்டு என்ட்ரியாக சஞ்சீவ் வெங்கட் சென்றுள்ளார்.

பிக்பாஸ்
பிக்பாஸ்

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் 50 நாள்கள் கடந்துள்ள நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு வைல்டு கார்டு என்ட்ரி நுழைந்தனர். முதல் நபராக ஏற்கனவே வெளியே சென்ற அபிஷேக் மீண்டும் ரீ - என்ட்ரி கொடுத்துள்ளார்.

இரண்டாவதாக நடன இயக்குநர் அமீர் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து மூன்றாவதாக ஒரு வைல்டு கார்டு என்ட்ரி உள்ளது எனச் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

இது தொடர்பான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் கறுப்பு உடையில் மாஸாக சஞ்சீவ் வெங்கட் நுழைந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போது அனைவரும் நிகழ்ச்சி எப்படி வெளியே தெரிகிறது எனக் கேள்வி கேட்டனர்.

ஆனால் சிபி மட்டும் விஜய் பிக்பாஸ் பார்க்கிறாரா? எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு சஞ்சீவ் ஆம் என்பதுபோல் தலையை ஆட்டினார்.

இதையும் படிங்க:BB Day 52: சேட்டை செய்த பிரியங்கா... திணறிய சிபி

ABOUT THE AUTHOR

...view details