தமிழ்நாடு

tamil nadu

'இன்னும் யாஷிகாவுக்கு அந்த விஷயம் தெரியாது' - தாயார் உருக்கம்

By

Published : Jul 27, 2021, 5:36 PM IST

சாலை விபத்தில் தோழி உயிரிழந்த செய்தி யாஷிகாவிற்கு இன்னும் தெரியாது என அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

யாஷிகா
யாஷிகா

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை (ஜூலை 26) மாமல்லபுரம் அருகே இரவில் நண்பர்களுடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளி ஷெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய யாஷிகாவின் கார்

இச்சம்பவம் குறித்து யாஷிகாவின் தாயார் கூறுகையில், "யாஷிகாவிற்குக் கால், இடுப்பு, வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அவர் மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். யாஷிகாவிற்கு தோழி இறந்த செய்தி இன்னும் தெரியாது. மருத்துவர்கள் இதை பற்றி அவரிடம் சொல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:யாஷிகா ஆனந்த் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details