தமிழ்நாடு

tamil nadu

விஜய் சேதுபதியால் நெட்பிளிக்சிற்கு ’லாபம்’

By

Published : Dec 7, 2020, 10:24 PM IST

சென்னை: இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.

laabam Movie
லாபம் திரைப்படம்

கரோனா தொற்று காரணமாக கடந்த எட்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டு திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனாலும் ரசிகர்களின் வருகை மிகவும் குறைந்தே காணப்படுகிறது.

இதற்கு ஓடிடி தளங்களின் வரவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் சிறிய முதலீட்டுப் படங்களே ஓடிடியில் வெளிவந்த நிலையில் சூர்யாவின் சூரரைப் போற்று ஓடிடியின் பாய்ச்சலை பெருமடங்காக்கியது.

லாபம் திரைப்படம்

இந்த நிலையில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சுஷாந்த் சிங் வழக்கு: சிபிஐ விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க மனு

ABOUT THE AUTHOR

...view details