தமிழ்நாடு

tamil nadu

விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By

Published : Nov 13, 2020, 3:18 PM IST

சென்னை: ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்திற்கு 'கோடியில் ஒருவன்' எனப் பெயர்வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Vijay antony
Vijay antony

'ஆள்', 'மெட்ரோ' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆனந்த் கிருஷ்ணன். இவர் தற்போது விஜய் ஆண்டனியை வைத்து புதிய படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ராஜா, தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார். தற்போதைய சூழலுக்கேற்றவாறு அரசியலை மையப்படுத்தி உருவாகும் த்ரில்லர் கதைக்கு ஜோகன் இசையமைக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது இப்படத்திற்கு 'கோடியில் ஒருவன்' எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கில் இப்படத்திற்கு 'விஜயராகவன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு நாயகியாக ஆத்மிகா நடித்துவருகிறார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details