தமிழ்நாடு

tamil nadu

பரதத்தை முன்னிறுத்தி வரும் 'நாட்டியம்'

By

Published : Feb 26, 2021, 3:42 PM IST

பிரபல தொழில் அதிபர் வெங்கட்ராம ராஜூவின் மகள் சந்தியா நாயகியாக 'நாட்டியம்' என்ற படத்தில் அறிமுகமாகிறார்.

Nattiyam tamil telugu movie, p.r Venkatrama raju's daughter, sandhya Raju, Venkatrama raju, Director Revanth korukonda, shravan bharadwaj, நாட்டியம், பி.ஆர்.வெங்கட்ராம ராஜூ,  பி.ஆர்.வெங்கட்ராம ராஜூவின் மகள், சந்தியா ராஜூ, ரேவந்த் கொருகொண்டா, ஷ்ரவண் பரத்வாஜ், Junior NTR, ஜூனியர் என்.டி.ஆர்
venkatrama-rajus-daughter-sandhya-makes-her-acting-debut-in-nattiyam-movie

பரதநாட்டியத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் 'நாட்டியம்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை இயக்குநர் ரேவந்த் கொருகொண்டா இயக்கியுள்ளார்.

பிரபல தொழில் நிறுவன குழுமத்தின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜூவின் மகள் சந்தியா ராஜூ முறையாகப் பரதம் பயின்றவர். சிறந்த நடனக்கலைஞரான சந்தியா ராஜூ அறிமுகமாகும் இப்படமானது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷ்ரவண் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

பிரபல திரைப்பட விநியோகஸ்தரான தில்ராஜூ ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தெலுங்கு மொழி திரைப்படத்தை விநியோகம் செய்கிறார். அண்மையில் இந்தத் திரைப்படத்தின் போஸ்டரை ‘அப்போலோ’ மருத்துவமனைக் குழுமத்தைச் சேர்ந்த உபாசனா கமினேனி கொண்டிலா அறிமுகம் செய்திருந்தார்.

திரைப்படத்தின் டீசரை தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர். யூ டியூபில் வெளியிட்டுள்ளார்.

தொழில் துறையில் சிறந்து விளங்கும் தொழிலதிபர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜூவின் மகள் முறையாக நடனம் பயின்று சிறந்த நடனக்கலைஞராக விளங்கும் நிலையில் அவர் திரைத்துறையிலும் முத்திரை பதிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:வைரல் வீடியோ: வாத்தி கம்மிங் பாடலுக்கு நஸ்ரியா நடனம்

ABOUT THE AUTHOR

...view details