தமிழ்நாடு

tamil nadu

கரோனாவை வெல்லும் முக்கூட்டணி- வைரமுத்து ட்வீட்

By

Published : Jun 15, 2021, 3:48 AM IST

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் நிலையில் இந்த முக்கூட்டணி இருந்தால் கரோனாவை வென்றுவிடலாம் என கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

Vairamuthu tweet on corona prevention
Vairamuthu tweet on corona prevention

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில் தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை அறிவித்தது. இதனையடுத்து கடந்த சில நாள்களாய் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தொற்று அதிகமுள்ள சில மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்தது.

அண்மையில் தொற்று குறைவாய் உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கவும் தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. இந்த நிலையில் தளர்வுகளை பயன்படுத்திக்கொண்டு பெரும்பாலான மக்கள் சகஜமாக வெளியே வர ஆரம்பித்துள்ளனர். இதனால் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "காக்கும் அரசு

கட்டுப்படும் மக்கள்

தடையில்லா தடுப்பூசி

இந்த முக்கூட்டணியால் மட்டுமே

கொன்றழிக்கும் கரோனாவை

வென்றெடுக்க முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தமிழ்நாடு அரசு +2 பொதுத்தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டதற்கு வரவேற்பு தெரிவித்த நிலையில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மன நிம்மதியைக் கெடுக்குறாங்க...காவல் ஆணையரிடம் நடிகர் செந்தில் புகார்!

ABOUT THE AUTHOR

...view details