தமிழ்நாடு

tamil nadu

இங்கிலாந்தில் திருடுபோன டாம் க்ரூஸின் பி.எம்.டபிள்யூ. கார்!

By

Published : Aug 28, 2021, 2:07 PM IST

'மிஷன்: இம்பாசிபிள் 7' படப்பிடிப்புக்காக டாம் க்ரூஸ் தற்போது இங்கிலாந்தில் இருந்துவருகிறார். இச்சூழலில் அவரது சொகுசு காரான பி.எம்.டபிள்யூ. திருடுபோயுள்ளது.

Tom Cruise
Tom Cruise

டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மிஷன் இம்பாசிபிள்'. இந்தப் படத்தின் வரிசையிஸ் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகியுள்ளன. இதில் 'ஈடன் ஹன்ட்' என்னும் கதாபாத்திரத்தில் டாம் க்ரூஸ் நடித்திருப்பார்.

கடைசியாக 2018ஆம் ஆண்டு ’மிஷன் இம்பாசிபிள்: ஃபால் அவுட்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குயரி, டாம் க்ரூஸை வைத்து 'மிஷன்: இம்பாசிபிள் 7' படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தை பாரமவுண்ட் தயாரித்துவருகிறது.

ஐரோப்பாவில் நடைபெற்றுவந்த 'மிஷன்: இம்பாசிபிள் 7' படப்பிடிப்பு, கரோனா அச்சுறுத்தல் காரணமாகஇங்கிலாந்திற்கு மாற்றப்பட்டு அங்கு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதற்காக டாம் க்ரூஸ் கடந்த சில மாதங்களாக இங்கிலாந்தில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், அவரது பி.எம்.டபியூ. எக்ஸ் 7 கார் பர்மிங்காமினில் உள்ள கிராண்ட் ஹோட்டலுக்கு வெளியே திருடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காரினுள் டாம் க்ரூஸின் உடமைகளும் இருந்துள்ளன.

இதுகுறித்து லண்டன் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் "டாம் க்ரூஸின் கார் திருடப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் உடனே காரை தேட ஆரம்பித்தோம். அவரது காரில் மின்னணு கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருந்தால் எங்களுக்கு கார் இருக்கும் இடத்தை எளிதில் கண்டுப்பிடிக்கமுடிந்தது.

உடனே காவலர்கள் கார் இருந்த இடத்திற்கு சென்று காரை மீட்டனர். ஆனால் அதனுள் இருந்த அவரது உடமைகளை திருடர்கள் திருடி சென்றுள்ளனர். முன்னதாக காரில் இருந்த தொழில்நுட்ப கருவிகளை திருடர்கள் அகற்றியதாக" அவர் தெரிவித்தார்.

டாம் க்ரூஸ் சமீபத்தில் தான் இங்கிலாந்தில் தங்க தான் விரும்புவதாகவும் இங்கிருக்கும் காலநிலை, தனது மனநிலையை முற்றிலும் மாற்றியாதக கூறியிருந்து நினைவுக்கூரத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் தொடங்கிய 'மிஷன் இம்பாசிபிள்' படப்பிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details