தமிழ்நாடு

tamil nadu

11 வருட காதல்... ஐந்தாண்டு இல்லறம்: முடிவுக்கு வந்த உறவு

By

Published : Oct 2, 2021, 7:13 PM IST

Updated : Oct 2, 2021, 7:46 PM IST

11 ஆண்டுகளாகக் காதலித்துவந்த சமந்தா-நாக சைதன்யா ஜோடி பிரிந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா- சைதன்யா
சமந்தா- சைதன்யா

‘மாஸ்கோவின் காவிரி’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா. பிறகு ஒருசில தமிழ்ப் படங்களில் நடித்துவந்த இவரை ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் அடையாளம் காட்டியது. கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கிய சிறு கதாபாத்திரத்தில் அவர் படத்தில் தோன்றியிருந்தார்.

காதல் மலர்ந்தது எப்படி?

சமந்தா- சைதன்யா

இதனையடுத்து அப்படம் தெலுங்கில் 2010ஆம் ஆண்டு ‘Ye Maaya Chesave' (ஏ மய்யா சேசவு) என்ற பெயரில் வெளியானது. அதில் நாக சைதன்யா, சமந்தா ஜோடியாக நடித்தபோது ஆரம்பித்தது, இவர்களின் காதல் கதை. சென்னையில் பிறந்த சமந்தா, ஹைதராபாத்தில் பிறந்த சைதன்யாவை அந்தப் படம் மூலம் சந்தித்து, நட்பாகப் பழகினர். பின்னர் அந்த நட்பு அவர்களை காதல் வலையில் விழவைத்தது.

சமந்தா-நாக சைதன்யா

ஒருபக்கம் காதல், மறுபக்கம் படங்கள் என பிஸியாக இருந்துவந்த இந்தக் காதல் ஜோடி 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் நுழைந்தது. மற்ற நடிகைகள்போல் இல்லாமல் சமந்தா திருமணமான பிறகும் படங்களில்தான் கவனம் செலுத்திவருகிறார்.

ரகசிய காதல்

சமந்தா - நாக சைதன்யா ஜோடி காதலித்துவந்த விஷயம் அவர்களது வீட்டிற்குக்கூட தெரியாமல் இருந்துள்ளது. இதனை ஒருமுறை நாக அர்ஜுனா பேட்டியில் தெரிவித்திருந்தார்.

சமந்தா-நாக சைதன்யா

திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஜோடியாக நடித்த Majili திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளியானது. அப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது நாக அர்ஜுனா அந்த ரகசியத்தை உடைத்தார்.

சமந்தா- சைதன்யா

நாக அர்ஜுனா உடைத்த ரகசியம்

அவர் கூறியதாவது, "எங்களுக்கு சமந்தா, சைதன்யா காதல் விஷயம் தெரியாது. இவர்களின் காதலை எங்களுக்கு என் வீட்டு நாய்தான் அடையாளம் காண்பித்தது. ஒருமுறை சமந்தா வீட்டிற்கு வந்தபோது, எங்கள் நாய் அவரிடம் ஓடிச்சென்று மிகவும் எளிமையாகப் பழகியது. அப்போதுதான் எங்களுக்குத் தெரியவந்தது இவர்களின் காதல் கதை குறித்து" எனக் கூறினார்.

சமந்தா-நாக சைதன்யா

அக்கினேனி பெயர் நீக்கம்

11 ஆண்டுகள் காதலித்துவந்த இந்த ஜோடி பலரது மனத்திற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. அதுமட்டுமல்லாது திருமணத்திற்குப் பின் சமந்தா தனது இயற்பெயரான சமந்தா ரூத் பிரபு என்ற பெயரை மாற்றி நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து சமந்தா அக்கினேனி என்று பயன்படுத்தத் தொடங்கினார். மேலும், சமந்தா அக்கினேனி என்ற பெயரை படங்களிலும் தனது அனைத்து சமூக வலைதளப் பக்கங்களிலும் பயன்படுத்தத் தொடங்கினார்.

சமந்தா-நாக சைதன்யா

ஆனால் சமீபத்தில் சமந்தா தனது பெயருக்குப் பின்னால் இருந்த அக்கினேனி பெயரை ட்விட்டரிலிருந்து நீக்கிவிட்டு எஸ் (S) என்று மாற்றியதிலிருந்து பல்வேறுவிதமான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. இதனையடுத்து சமீபத்தில் மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் சமந்தாவிடம் நேர்காணல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் அவரிடம், அக்கினேனி பெயரை நீக்கியதற்கான காரணம் கேட்கப்பட்டது.

சமந்தா- சைதன்யா

விளக்கம் தேவையில்லை

அதற்குப் பதிலளித்த சமந்தா, ''இதற்குப் பதில் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை. நான் எதற்கும் எதிர்வினையாற்றும் நபர் இல்லை. அக்கினேனி பெயரை நீக்கியதற்கு எந்த நோக்கமும் இல்லை.

சமந்தா- சைதன்யா

யாரிடமும் இது குறித்தான விளக்கம் அளிக்க வேண்டியதில்லை. எப்போதும் போன்று இப்போதும் நான் இதற்கு எதிர்வினையாற்ற விரும்பவில்லை" என்றார்.

விவாகரத்து அறிவிப்பு

இருப்பினும் வதந்திகளுக்குப் பதிலளிக்காமல் இருந்த ஜோடி, இன்று (அக். 2) தங்களது திருமண வாழ்க்கை முடிவடைந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

சமந்தா-நாக சைதன்யா

பொக்கிஷமாகக் பார்க்கிறோம்

இது குறித்து இருவரும் தங்களது சமூக வலைதளங்களில், "மிகவும் ஆலோசித்த பிறகு, இனி நாங்கள் கணவன்-மனைவியாகப் பயணிக்கப்போவதில்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்கள் இருவருக்கும் இடையே நட்பு இருந்தது. அதை நாங்கள் பெரும் பொக்கிஷமாகக் பார்க்கிறோம். அந்த நட்புதான் எங்களின் உறவுக்கு அடிப்படை.

சைதன்யா வெளியிட்ட பதிவு

இனியும் எங்களுக்குள் நட்பு தொடரும். இந்தக் கடுமையான சூழ்நிலையில் நண்பர்கள், ஊடகங்கள் எங்களை ஆதரிக்க வேண்டும். எங்களின் தனிநபர் சுதந்திரத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

11 ஆண்டுகள் காதல், 5 ஆண்டு இல்லற வாழ்க்கை முடிவுக்கு வந்தது சமந்தா, சைதன்யா ஜோடி ரசிகர்கள் மனத்தில் இடி விழுந்ததுபோல் உள்ளது.

இதையும் படிங்க: அவரவர் சொந்த வழியைத் தொடரப் போகிறோம் - சமந்தா

Last Updated : Oct 2, 2021, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details