தமிழ்நாடு

tamil nadu

தனுஷின் திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பு நிறைவு!

By

Published : Oct 7, 2021, 5:44 PM IST

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவந்த 'திருச்சிற்றம்பலம்' படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ்
தனுஷ்

நடிகர் தனுஷை வைத்து 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' ஆகியப் படங்களை இயக்கியவர், மித்ரன் ஜவஹர். இவர் தற்போது மீண்டும் நான்காவது முறையாக தனுஷுடன் கூட்டணி வைத்துள்ளார்.

தனுஷின் 44ஆவது படமான இதற்கு 'திருச்சிற்றம்பலம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கிய நிலையில் பெரும்பாலான காட்சிகள் சென்னை சுற்றுவட்டார இடங்களில் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருச்சிற்றம்பலம் திரைப்படம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது 'மாறன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதனையடுத்து செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க:சஞ்சனா மீது பாய்ந்த மற்றொரு வழக்கு

ABOUT THE AUTHOR

...view details