தமிழ்நாடு

tamil nadu

நயன்தாராவின் ’நெற்றிக்கண்’ பட போஸ்டர் வெளியீடு

By

Published : Oct 23, 2020, 12:32 PM IST

சென்னை: நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ’நெற்றிக்கண்’ படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

நயன்தாரா
நயன்தாரா

‘அவள்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மிலிந்த ரெளவ் இயக்கிவரும் திரைப்படம், ’நெற்றிக்கண்’. விக்கேனஷ் சிவன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துவருகிறார்.

இதில் பார்வையற்றப் பெண்ணாக நடிகை நயன்தாரா நடித்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மிகவும் எளிமையான தோற்றத்தில், நெற்றியில் ரத்தம் வடியம்படி நயன்தாரா இருக்கும் அப்போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. விரைவில் இப்படத்தின் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விக்கேனஷ் சிவன் தயாரிக்கும் முதல் திரைப்படம் ’நெற்றிக்கண்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கொமரம் பீம்மின் குரலாக கர்ஜிக்கும் ராம் சரண்

ABOUT THE AUTHOR

...view details