தமிழ்நாடு

tamil nadu

’அப்பா மட்டும் போதும்...’ - சொல்லாமல் சொல்லும் ரஜினி மகள்?

By

Published : Jan 18, 2022, 8:30 AM IST

தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி பிரிவதாக அதிகாரப்பூர்வமாக நேற்றிரவு அறிவித்திருந்த நிலையில், ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா இன்று (ஜன.18) அதிகாலையில் தனது ட்விட்டர் பக்க முகப்பு படத்தை மாற்றியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/18-January-2022/14214172_d2.JPG
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/18-January-2022/14214172_d2.JPG

நடிகர் தனுஷ் - ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு தங்கள் 18 ஆண்டு கால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக இந்த ஜோடி அறிவித்தது.

இதுகுறித்த அறிவிப்பை தனுஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்றிரவு (ஜன.17) வெளியிட்டிருந்தார்.

தனுஷின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஐஸ்வர்யாவும், ”கேப்ஷன் எதுவும் தேவையில்லை. உங்களது அன்பும், புரிதலும் மட்டுமே தேவை” என கூறியிருந்தார். இதனால் அவர்களது குடும்ப வட்டாரங்கள் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சௌந்தர்யா ரஜினிகாந்த் புதிய ட்விட்டர் புகைப்படம்

இந்நிலையில் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்க முகப்பு படத்தை இன்று (ஜன.18) அதிகாலை திடீரென மாற்றியிருந்தார். அதில் ரஜினிகாந்த் சிறுவயதில் உள்ள தனது இரு மகள்களையும் தூக்கியபடி மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.

தனுஷின் ட்விட்டர் பக்க அறிவிப்பு

நேற்றிரவே தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை சௌந்தர்யாவின் ட்விட்டர் பக்க முகப்பு புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தின் மூலம் தந்தை ரஜினிகாந்த் மட்டும் போதும் என சௌந்தர்யா குறிப்பால் உணர்த்துவதாக தகவல்கள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா தனது முதல் கணவரை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிகிறேன்; தனுஷ்

ABOUT THE AUTHOR

...view details