தமிழ்நாடு

tamil nadu

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் ஒத்திவைப்பு!

By

Published : Jan 20, 2022, 1:28 PM IST

கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக, நேற்று (ஜனவரி 19) நடைபெறவிருந்த சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் ஒத்திவைப்பு!
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் ஒத்திவைப்பு!

சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று (ஜனவரி 19) நடைபெறவிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்தலானது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தலுக்கு அனுமதி கேட்டு சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் காவல் துறையினருக்கு அனுமதி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா பரவல் காரணமாகத் தேர்தலை நடத்த விருகம்பாக்கம் காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

இதனால் நேற்று நடைபெறவிருந்த சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் குறுஞ்செய்தி மூலமாக பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சூர்யா - ஜோதிகா, உதயநிதிக்கு 'சமூக ஆஸ்கார்' விருது!

ABOUT THE AUTHOR

...view details