தமிழ்நாடு

tamil nadu

சாய்பல்லவி தேவதையிடம் இருந்து வந்த பாராட்டு மன அழுத்தத்தை போக்கியது - ஹலிதா ஷமீம்

By

Published : Apr 24, 2020, 2:53 PM IST

'சில்லுக்கருப்பட்டி' படத்தை பார்த்த சாய்பல்லவி இயக்குநர் ஹலிதா ஷமீமை உணர்ச்சி பொங்க பாராட்டியுள்ளார்.

Sai Pallavi
Sai Pallavi

தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான 'பூவரசம் பீப்பி' என்ற திரைப்படத்தை இயக்கியவர் பெண் இயக்குநர் ஹலிதா ஷமீம். இவர் சமீபத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, சாரா அர்ஜீன் உள்ளிட்டவர்களை வைத்து 'சில்லுக்கருப்பட்டி' என்னும் திரைப்படத்தை இயக்கினார்.

டிவைன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெங்கடேஷ் வேலினி தயாரித்த இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் நகர பின்னணி கொண்ட நான்கு குறுங்கதைகளைக் கூறும் அந்தாலஜி வகை திரைப்படமாகும். இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

இதனையடுத்து நடிகை சாய்பல்லவி சமீபத்தில் இப்படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்து ஹலிதாவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதில், "சில்லுக்கருப்பட்டி படத்தை பார்த்து நானும் எனது பெற்றோரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தோம். உண்மையில் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். நல்ல இதமான உணர்வுகளை வழங்கிய உங்களுக்கு நன்றி. இன்னும் இதே போல் அதிக படங்களை எடுங்கள்" என்று கூறியுள்ளார்.

சாய்பல்லவியின் இந்த பாராட்டு குறித்து தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் நன்றி தெரிவித்த ஹலிதா ஷமீம் பதிவிட்டதாவது, "இந்த ஊரடங்கால் நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். அப்போது சாய்பல்லவி என்ற தேவதையிடம் இருந்து வந்த இந்த மெசேஜ் எனது மன அழுத்தத்தை போக்கிவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details