தமிழ்நாடு

tamil nadu

இறுதிகட்டத்தில் ஆர்.ஆர்.ஆர். - உக்ரைன் பறந்த படக்குழு

By

Published : Aug 3, 2021, 1:59 PM IST

'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காகப் படக்குழு உக்ரைன் நாட்டிற்குச் சென்றுள்ளது.

ஆர்.ஆர்.ஆர்
ஆர்.ஆர்.ஆர்

நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்.'. ராஜமௌலி இயக்கும் இதில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லூரி சீதாராம ராஜு, குமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் உருவாகிவருகிறது. நட்பை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் படப்பிடிப்பிற்காகப் படக்குழு உக்ரைன் நாட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு ஒரு பாடலை மட்டும் முடித்துவிட்டுத் திரும்பவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடா ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க:தன்னைத்தானே செதுக்கியவன் இவன்: 29 years of தல அஜித்

ABOUT THE AUTHOR

...view details