தமிழ்நாடு

tamil nadu

'மூக்குத்தி அம்மன்' கதை இதுதானாம்!

By

Published : Jun 4, 2020, 11:29 PM IST

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் கதை குறித்த தகவலை ஆர்ஜே பாலாஜி பகிர்ந்துள்ளார்.

RJ Balaji reveals the story of  Mookuthi Amman
RJ Balaji reveals the story of Mookuthi Amman

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர், ஆர்ஜே பாலாஜி. இவர் தொலைக்காட்சியில் கிரிக்கெட் மற்றும் வானொலி வர்ணனையாளராகவும் பிரபலமானவர். கடந்த ஆண்டு வெளியான 'எல்கேஜி' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

தற்போது இயக்குநராக களமிறங்கியுள்ளார், ஆர்ஜே பாலாஜி. ஆம். நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். அறிமுக இயக்குநர் என்.ஜே. சரவணன் உடன் இணைந்து இந்தப் படத்தை இயக்குகிறார்.

ஏழைக் குடும்பத்துடன் தவித்து வரும் ஆர்ஜே பாலாஜிக்கு, அம்மன் உதவி செய்வது போன்று இந்தக் கதை அமைந்துள்ளது என்று ஆர்ஜே பாலாஜி பகிர்ந்துள்ளார்.

ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் வில்லனாக, அஜய் கோஷ் நடித்துள்ளார்.

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details