தமிழ்நாடு

tamil nadu

புத்தகம் குறித்து விளக்கம் கேட்கும் ரஜினி: வைரலான வீடியோ!

By

Published : Oct 18, 2019, 8:24 AM IST

ஒவ்வொரு படத்தையும் நடித்து முடித்த பிறகு இமயமலை யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இம்முறை தனது மகள் ஐஸ்வர்யா தனுஷை உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

darbar

ரிஷிகேஷில் உள்ள புத்தகக் கடை ஒன்றில் ரஜினிகாந்த் புத்தகம் குறித்த விளக்கத்தை கடைக்காரரிடம் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு படப்பிடிப்பு முடிவடைந்த பின்பு இமயமலைக்குச் செல்வதை ரஜினி வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் அவர் இமயமலைக்குச் செல்வதை தவிர்த்துவந்தார். காலா, 2.O உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் இமயமலைக்குச் செல்லத் தொடங்கினார்.

தற்போது தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து ரஜினிகாந்த் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். இம்முறை தனது மகள் ஐஸ்வர்யா தனுஷை உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

புத்தக கடையில் ரஜினி

ரிஷிகேஷில் உள்ள தயானந்த் ஆசிரமத்தில் தங்கியிருந்த ரஜனிகாந்துடன் பக்தர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சில தினங்களுக்கு முன் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

இதனையடுத்து ரஜினிகாந்த் ரிஷிகேஷில் உள்ள புத்தக நிலையம் ஒன்றில் புத்தகம் வாங்கியதுடன், அந்த புத்தகம் குறித்து கடைக்காரரிடம் விளக்கம் கேட்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இமயமலை சென்றுள்ள ரஜினியின் ஆன்மீகப் பயணம் முடிவடைந்த பின்பு இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் தனது 168ஆவது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று தகவல்கள் வலம்வருகின்றன.

இதையும் வாசிங்க: ஹேண்ட்சம் வில்லன் - ரஜினி பாராட்டால் உச்சி குளிர்ந்த நடிகர்

Intro:Body:

Rajini Rishikesh visit


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details