தமிழ்நாடு

tamil nadu

'பராசக்தி ஹீரோடா'...சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகும்'சிவாஜி தி பாஸ்'

By

Published : Jun 15, 2021, 8:48 PM IST

சென்னை: இயக்குநர் ஷங்கர் - ரஜினி கூட்டணியில் வெளியான சிவாஜி படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவானதையடுத்து ரசிகர்கள் அதனை சமூகவலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

SIVAJI
SIVAJI

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவான சிவாஜி திரைப்படம் வெளியாகி இன்றுடன் (ஜூன்.15) 14 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதில், ரஜினியுடன் ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி, பட்டிமன்ற புகழ் சாலமன் பாப்பையா, ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சிவாஜி படப்பிடிப்பில் ஷங்கர் - ரஜினி

ஷங்கர் - ரஜினியின் மாபெரும் கூட்டணியில் உருவான இந்தப்படம், ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பபை பெற்றது. இந்தியாவில் இருக்கும் கறுப்பு பணத்தை ஒழித்து இந்தியாவை வல்லரசு நாடுகளில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற ஒருவரி கதையை, ஷங்கர் தனது பாணியில் திரைக்கதை எழுதி இயக்கியிருப்பார். இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவு. காட்சிக்குக் காட்சி திரையில் அவரின் ஒளிப்பதிவு, ரஜினியின் ஸ்டைலை இன்னும் ஒரு படிக்கு மேலே கொண்டுபோய் ரசிகர்களிடையே சேர்த்தது.

இந்தப் படத்தில் ரஜினி சிக்லட்டை வாயில் போடுவது, ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டுவது என படம் முழுவதும் தனது ஸ்டைலால் ரசிகர்களை பிரமிக்க வைத்திருப்பார், ’ஸ்டைல் மட்டுமல்லாது’, ’நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி’, ’ஏழை இன்னும் ஏழையவே தான் இருக்கான்’, ’கண்ணா... பன்னிங்க தான் கூட்டமா வரும்...சிங்கம் சிங்கிளா தான் வரும்’, ’பராசக்தி ஹீரோடா...’ ’பேர கேட்டா சும்மா அதிருதுல்ல’ போன்ற வசனங்களும் தியேட்டர்களில் ரசிகர்களை விசில் அடிக்க வைத்தது.

இந்தப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக சமூகவலைதளப் பக்கத்தில் ரசிகர்கள்#14YearsOfSivajiTheBoss என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து சிவாஜி படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் போன்ற நினைவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details