தமிழ்நாடு

tamil nadu

’விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது’ - பிஆர்ஓ நிகில் முருகன்

By

Published : Apr 16, 2021, 1:47 PM IST

சென்னை: மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vivek
vivek

நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில்நகைச்சுவை நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக நடிகர் விவேக் நேற்று (ஏப்ரல் 15) கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இந்நிலையில், விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "விவேக் இன்று காலை வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

பிஆர்ஓ நிகில் முருகன் செய்தியாளர்கள் சந்திப்பு

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தடுப்பூசியால் பாதிப்பு இல்லை. விவேக் சுயநினைவுடன் இருக்கிறார். விரைவில் குணமடைந்து செய்தியாளர்களை சந்திப்பார்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details