தமிழ்நாடு

tamil nadu

'ராதே ஷியாம்’ படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே

By

Published : Jan 17, 2021, 2:48 PM IST

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படம் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Pooja Hegde wraps up 'Radhe Shyam' schedule
Pooja Hegde wraps up 'Radhe Shyam' schedule

ஹைதராபாத்: பூஜா ஹெக்டே தனது ‘ராதே ஷியாம்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், ராதே ஷியாம் படத்துக்காக ஒதுக்கப்பட்ட 30 நாட்கள் முடிந்தது. தற்போது வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன். ஹைதராபாத் -- மும்பை என குறிப்பிட்டுள்ளார்.

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படம் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'ராதே ஷியாம்’ படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே

ABOUT THE AUTHOR

...view details