தமிழ்நாடு

tamil nadu

ஃபிரான்சில் திரையிடப்படும் 'பரியேறும் பெருமாள்'

By

Published : Apr 11, 2019, 9:50 AM IST

'பரியேறும் பெருமாள்' ஃபிரான்ஸ் நாட்டில் நாளை நடைபெறும் திரைப்படத் திருவிழாவில் திரையிடப்பட உள்ளது.

பரியேறும் பெருமாள்

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான படம், 'பரியேறும் பெருமாள்'.

இதில், கதிர் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருந்தார். தவிர, யோகிபாபு, லிஜீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

'பரியேறும் பெருமாள்' படம் வெளியாகி வெற்றிபெற்ற பிறகும் வெளி நாடுகளில் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுவருகிறது.

பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுவரும் நிலையில், தற்போது ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்படத் திருவிழாவில் பரியேறும் பெருமாள் திரையிடப்படுகிறது.

பரியேறும் பெருமாள்

புதிய படங்கள் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே இந்த விழாவில் திரையிடுவது வழக்கம். ஆனால் தற்போது 'பரியேறும் பெருமாள்' படம் வெளியாகி பல மாதங்களுக்குப் பிறகு இவ்விழாவில் திரையிடப்படுவது மகிழ்ச்சியை தருகிறது என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் தெரிவித்துள்ளார்.

'பரியேறும் பெருமாள்' படத்திற்காக பல இடங்களில் 2018ஆம் ஆண்டின் சிறந்த இயக்குநர் என்ற விருதை மாரி செல்வராஜ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details