தமிழ்நாடு

tamil nadu

திருப்பதியில் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

By

Published : Oct 24, 2019, 11:46 PM IST

ஜாலியாக வெளிநாடுகளுக்கு டூர் செல்வது மட்டுமல்லாமல், கோயில்களுக்கும் சென்று ஆன்மீக ஈடுபாட்டை வெளிப்படுத்தி வரும் நயன்தாரா, காதலன் விக்னேஷ் சிவனுடன் திருப்பதியில் தரிசனம் செய்துள்ளார்.

திருப்பதியில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா

அமராவதி: காதலன் விக்னேஷ் சிவனுடன் திருப்பதிக்கு சென்ற நடிகை நயன்தாரா இன்று சாமி தரிசனம் செய்தார்.

வெளிநாடு பயணம், செஃல்பி புகைப்படங்கள், அவுட்டிங் என அவ்வப்போது ஜாலியாக பொழுதை கழிக்கும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி, ஆன்மீகத்திலும் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன் காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் இருவரும் ஜோடியாக அத்திவரதரை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து தற்போது திருப்பதிக்கு இணைந்து வந்து தரிசனம் செய்தனர்.

விக்னேஷ் சிவனுடன் திருப்பதி வந்த நயன்தாரா

இன்று காலை திருப்பதி வந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா விஐபி வரிசையில் சென்று மலையப்ப சாமியை தரிசித்தனர். இதன் பின்னர் அர்ச்சகர்கள் அவர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

நயன்தாரா கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள், அவர் கோயிலை விட்டு வெளியே வந்ததும் சூழ்ந்துகொண்டு செஃல்பி புகைப்படங்கள் எடுத்தனர்.

நயன்தாரவுடன் இணைந்து செஃல்பி எடுக்கும் ரசிகர்கள்

விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள 'பிகில்' உலகம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) பிரமாண்டமாக வெளியாகிறது. இதனிடையே நயன்தாரா திருப்பதியில் தரிசனம் மேற்கொண்டுள்ளார்.

திருப்பதியில் நயன்தாரா சாமி தரிசனம்

இதேபோல் பிரபல இசையமைப்பாளரான டிரம்ஸ் சிவமணியும் தன் குடும்பத்தாருடன் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி திருப்பதியில் சாமி தரிசனம்

Film actress Nayanthara went to Tirumala along with her family members and famous musician Sivamani. On today mornign at vip darshan she visit lard Venkateswara. later on archakas gave prasadam to Nayanthara


Conclusion:

ABOUT THE AUTHOR

...view details