தமிழ்நாடு

tamil nadu

ஓடிடியில் வெளியாகும் ‘ராக்கி’ திரைப்படம்?

By

Published : Jun 2, 2021, 1:41 PM IST

சென்னை: நடிகர் வசந்த் ரவி நடித்துள்ள ‘ராக்கி’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராக்கி
ராக்கி

’தரமணி’ பட நடிகர் வசந்த் ரவி, ரவீனா, பாரதி ராஜா, சரண்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராக்கி' திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

’ராக்கி' படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை, ‘ரவுடி பிக்சர்ஸ்' சார்பாக நயன்தாராவும்- விக்னேஷ் சிவனும் வாங்கியுள்ளனர்.

இந்நிலையில், ‘ராக்கி’ திரைப்படம் ஓடிடி தளமான சோனி லைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படக்குழு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

ABOUT THE AUTHOR

...view details