தமிழ்நாடு

tamil nadu

'நெற்றிக்கண்' - ஆக்ஷனில் களமிறங்கும் நயன்தாரா

By

Published : May 24, 2020, 3:23 PM IST

நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் நெற்றிக்கண் திரைப்படத்தின் சுவாரஸ்யமான தகவல்களை படத்தின் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பகிர்ந்துள்ளார்.

nayanthara-acts-in-action-sequences-in-netrikann
nayanthara-acts-in-action-sequences-in-netrikann

விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் 'நெற்றிக்கண்'. 'அவள்' திரைப்படத்தை இயக்கிய மிலிந்த ரௌவ் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் வெளியானபோதே ரசிகர்களின் ஆவலை தூண்டியது.

தற்போது இந்தத் திரைப்படத்திற்கு எடிட்டிங் செய்யும் லாரன்ஸ் கிஷோர் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஆக்ஷன் விருந்தாக இருக்கப்போகிறது. பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கே கொண்டுபோகும் அளவுக்கு திரைப்படம் சுவாரஸ்யமான த்ரில்லராக இருக்கும். திரைப்படத்தின் 60 விழுக்காடு படப்பிடிப்பு முடிந்திருக்கிறது.

'நெற்றிக்கண்'

குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருப்பதால் ஆக்ஷன் காட்சிகளில் நயன்தாரா ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க... நயன்தாராவின் 'நெற்றிகண்'-இல் திருப்பம் தர வரும் அஜ்மல்

ABOUT THE AUTHOR

...view details