தமிழ்நாடு

tamil nadu

'விக்ரம்' படக்குழுவில் இணைந்த இரட்டைச் சகோதர்கள்!

By

Published : Jun 12, 2021, 7:42 PM IST

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகும் 'விக்ரம்' படத்தில் சண்டைக்காட்சி இயக்குநர்களாக அன்பறிவ் சகோதர்கள் இணைந்துள்ளனர்.

AnbAriv
AnbAriv

விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்தாக கமலை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார். முன்னதாக கமலின் பிறந்தநாளானா நவம்பர் ஏழாம் தேதி படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கமல் ஹாசனின் 232ஆவது படமான 'விக்ரம்' கேங்ஸ்டர் பட ஸ்டைலில் உருவாகவுள்ளது. ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், காவல் துறை அலுவலர்களை விருந்துக்கு அழைத்து அவர்களை வேட்டையாடுவது போன்று காட்சிகள் இப்படத்தின் டீசரில் முன்னதாக இடம்பெற்றிருந்தன.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளார். கரோனா பரவலின் தாக்கம் குறைந்ததும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பிற்கு முன்னதாக திரைக்கதையின் இறுதி கட்ட பணிகள், விக்ரம் படத்தில் நடிக்கவுள்ள மற்ற கதாபாத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோருக்கான தேடல்கள் மும்முரமாக நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், 'விக்ரம்' திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை இயக்க தேசிய விருது வென்ற இரட்டை சகோதர்கள் அன்பறிவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான சந்திப்பின் போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் ஆகியோருடன் அன்பறிவ் சகோதரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

'மாஸ்டர்' படத்தில் நடித்த விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ் ஆகியோரை விக்ரம் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details