தமிழ்நாடு

tamil nadu

சூர்யா பட இசையமைப்பாளர் காலமானார்!

By

Published : Jul 19, 2021, 3:11 PM IST

நடிகர் சூர்யா நடித்த 'ஶ்ரீ' படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ். முரளி காலமானார்.

சூர்யா பட இசை அமைப்பாளர் காலமானார்
சூர்யா பட இசை அமைப்பாளர் காலமானார்

நடிகர் சூர்யா நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஶ்ரீ'. இப்படத்தை புஷ்பவனம் இயக்கியிருந்தார்.

இப்படத்திற்கு டி.எஸ். முரளிதரன் இசையமைத்திருந்தார். இவர் இந்தி உள்பட 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இந்தச் சூழலில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த முரளிதரன் திடீரென காலமானார். இவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இறுதி ஊர்வலம் சென்னை சாலிகிராமத்தில் நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details