தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய ஆர்.ஆர்.ஆர் படக்குழு

By

Published : Oct 6, 2020, 12:33 PM IST

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர் பட மேக்கிங் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிவிவி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஆர்.ஆர்.ஆர்
ஆர்.ஆர்.ஆர்

'பாகுபலி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'ரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர்.ஆர்.ஆர்). ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படத்தை டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

ஆர்.ஆர்.ஆர் மேக்கிங் வீடியோ

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு படக்குழு எவ்வாறு பாதுகாப்பாக தயாராகிறது என்பது காண்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த வீடியோ முடிவில், அக்டோபர் 22ஆம் தேதி இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் கோமரம் பீம் கதாப்பாத்திரத்தின் தோற்றம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்கத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம்

ABOUT THE AUTHOR

...view details