தமிழ்நாடு

tamil nadu

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பிரதமர் வருத்தம்

By

Published : Apr 5, 2021, 7:33 PM IST

Updated : Apr 5, 2021, 10:45 PM IST

விஞ்ஞானி நம்பி நாராயணன், நடிகர் மாதவனுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பிரதமர் நரேந்திர மோடி வருந்தினார் என்றும் நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

Madhavan
Madhavan

கேரள காவலர்கள் 1994ஆம் ஆண்டு கிரையோஜினிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாரயணனை கைது செய்தனர். இந்த வழக்கில் நம்பி நாராயணன் நிரபராதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறியது.

இந்நிலையில், விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்கையை மையமாக வைத்து 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' என்னும் படத்தை எடுக்கவுள்ளதாக நடிகர் மாதவன் அறிவித்திருந்தார். அதுமட்டுமல்லாது இந்தப் படத்தின் மூலம் மாதவன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இதில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.

சி.எஸ். சாம் இசையமைத்துள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில், நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். ஏப்ரல் 1ஆம் தேதி வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் சமூகவலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து நம்பி நாரயணனும் மாதவனும் சில நாள்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாதவன் தற்போது தனது சமூகவலைதளப்பக்கமான ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடியை சில வாரங்களுக்கு முன்பு நானும் நம்பி நாரயாணன் ஜியும் சந்தித்து பேசினோம். 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' ட்ரெய்லரை பார்த்து பாராட்டிய நரேந்திர மோடி நம்பி நாராயணனுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வருத்தப்பட்டார்” எனப் பதிவிட்டார்.

Last Updated : Apr 5, 2021, 10:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details