தமிழ்நாடு

tamil nadu

'ராக்கெட்ரி' படத்தில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா இசை - சாம் CS பெருமிதம்

By

Published : Oct 5, 2020, 3:42 PM IST

சென்னை: 'ராக்கெட்ரி' படத்தில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவை பயன்படுத்தி பின்னணி இசையை உருவாக்கியுள்ளதாக இசையமைப்பாளர் சாம் தெரிவித்துள்ளார்.

சாம்
சாம்

மாதவன் நடித்து இயக்கிவரும் படம் 'ராக்கெட்ரி'. உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகிவரும் இப்படத்திற்கு சாம் CS இசையமைத்துவருகிறார்.

இந்தப் படத்திற்காக 100 பீஸ் ஆர்க்கெஸ்ட்ரா அடங்கிய இசைத் தொகுப்பை பிரத்யேகமாக பயன்படுத்தி இந்தப் படத்தின் பின்னணி இசைக்கோப்பு உருவாக்கியுள்ளார். மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவால் இந்த இசைத்தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்திய பல படங்களில் அவரது இசை பெரும் பாராட்டுகளை குவித்து வருகிறது. தற்போது கோலிவுட்டை தாண்டி பாலிவுட், நமது அண்டை மொழி திரைப்படங்களிலும் இசையமைப்பாளராக இருந்துவருகிறார்.

இது குறித்து இசையமைப்பாளர் சாம் CS கூறுகையில், "மதிப்புமிக்க ஒரு பெரும்படைப்பில் வேலை செய்ய வேண்டுமென்பது எனது நெடுநாளைய கனவாக இருந்தது. 'ராக்கெட்ரி' படம் அதை நனவாக்கியுள்ளது. இது சாதாரணமான படம் இல்லை மிகவும் உணர்வுப்பூர்வமான படைப்பு.

இந்தப் படம் உலகத்தரத்தில் உருவாக உள்ளதால் நான் இப்படத்திற்கு மிகச்சிறந்த இசையை உருவாக்க நினைத்தேன். மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவை, இப்படத்திற்குப் பயன்படுத்தி படத்தின் பின்னணி இசைக்கோப்பு உருவாக்கியுள்ளேன்.

'ராக்கெட்ரி' பெரும் படைப்பாக, பன்மொழியில் இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை உருவாக்கும் உலகத்தரமான படைப்பாக இருக்கும். இதில் உலகளவில் பணிபுரியும் புகழ்மிக்க நடிகர்கள் பங்கேற்றுள்ளார்கள்.

இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் எனக்கு இசையில் பெரும் பொறுப்புணர்வை தந்திருக்கிறது. அதனை என் உயிராய் மதித்து இசையை தந்திருக்கிறேன். ரசிகர்கள் அதனை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details