தமிழ்நாடு

tamil nadu

கே.வி. ஆனந்த்தின் மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு - கமல் ஹாசன் இரங்கல்

By

Published : Apr 30, 2021, 2:34 PM IST

சென்னை: ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி. ஆனந்த் மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவிததுள்ளார்.

kv
kv

புகைப்படக்கலைஞரான கே.வி. ஆனந்த் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி பின் இயக்குநர் ஆனார். இவர் தமிழில் காதல் தேசம், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கனா கண்டேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தவர், ’அயன்’, ’கோ’, ’மாற்றான்’, ’அனேகன்’, ’கவண்’ மற்றும் ’காப்பான்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை (ஏப்ரல் 30) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் காலமானார். இவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவத்துள்ளார். அதில், "பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த் தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி." என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details