தமிழ்நாடு

tamil nadu

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த D43 படக்குழு

By

Published : Jul 10, 2021, 7:16 PM IST

தனுஷ் நடித்துவரும் 'D43' படத்தின் படப்பிடிப்புபோது எடுத்த புகைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

D43 படக்குழு
D43 படக்குழு

நடிகர் தனுஷ் நடித்துவரும் 'D43' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது.

இப்படத்திலிருந்து திடீரென ஒருசில காரணங்களால் இயக்குநர் கார்த்திக் நரேன் விலகிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் இதுகுறித்து படக்குழு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், 'D43' படம் குறித்த புகைப்படம் ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் நடிகர் தனுஷுக்கு, இயக்குநர் கார்த்திக் நரேன் காட்சிகளை விவரிப்பது போன்று அமைந்துள்ளது. இதன்மூலம் 'D43' படத்திலிருந்து கார்த்திக் நரேன் விலகிவிட்டார் என்று பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விக்ரம் ஃபர்ஸ்ட் லுக்: தொடரும் விருமாண்டி மீதான காதல்!

ABOUT THE AUTHOR

...view details