தமிழ்நாடு

tamil nadu

கர்ணன் பட டீசர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

By

Published : Mar 20, 2021, 4:02 PM IST

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள, ‘கர்ணன்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கர்ணன் டீசர்
கர்ணன் டீசர்

’பரியேறும் பெருமாள்’ படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘கர்ணன்’. தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள இதில், கெளரி கிஷன், லால், நட்டி என்கிற நடராஜன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மாரி செல்வராஜ் ட்விட்

சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான 'கண்டா வரச்சொல்லுங்க', 'பண்டாரத்தி புராணம்', 'திரௌபதியின் முத்தம்' ஆகிய மூன்று பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பியன.

இந்நிலையில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்ணன் பட டீசர் வரும் 23ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும் டீசரின் போஸ்டரும், வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details