தமிழ்நாடு

tamil nadu

'குஞ்சன் சக்சேனா- த கார்கில் கேள்' புகைப்படங்களை வெளியிட்ட ஜான்வி கபூர்!

By

Published : Aug 3, 2020, 8:02 AM IST

'குஞ்சன் சக்சேனா- த கார்கில் கேள்' படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ளார்.

ஜான்வி
ஜான்வி

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூர் 'தடக்' திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஞ்சன் சக்சேனா- த கார்கில் கேள்' (GUNJAN SAXENA).

1999ஆம் ஆண்டு நடந்த கார்கில் போர் மண்டலத்திற்குள் நுழைந்த முதல் இந்தியப் பெண் விமானியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது.

ஷரன் சர்மா இயக்கியுள்ள, இந்தப் படத்தில் பங்கஜ் திரிபாதி, அங்கத் பேடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் 'குஞ்சன் சக்ஸேனா' ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் விமான உடையணிந்தும், மற்றொரு புகைப்படத்தில் தந்தையாக நடிக்கும் பங்கஜ் திரிபாதியுடன் அமர்ந்து மகிழ்ச்சியுடன் பேசுவது போலும் உள்ளது. ஜான்வி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

'குஞ்சன் சக்சேனா' திரைப்படம் வரும் 12ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:3 மொழிகளுக்கு 3 கதை; ஆனால் ஒரே கிளைமாக்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details