தமிழ்நாடு

tamil nadu

முத்தம் கிடைக்குமா?- ரசிகர் கேட்ட கேள்விக்கு கேஷுவலாக பதில் சொன்ன ஜான்வி

By

Published : Mar 21, 2021, 3:56 PM IST

Updated : Mar 21, 2021, 5:08 PM IST

ரசிகர் ஒருவர் முத்தம் குறித்து கேட்ட கேள்விக்கு நடிகை ஜான்வி கபூர் கேஷுவலாக பதில் கூறிய விதம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ’தடக்' படம் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். இதனையடுத்து தற்போது இவர் இந்தியில் உருவாகும் ’தோஸ்தானா 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாக இருக்கும் ஜான்வி, அடிக்கடி தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் உரையாடி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் விடுமுறை நாளான இன்று(மார்ச்.21)ஜான்வி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் இன்ஸ்டா பக்கத்தில் பதில் அளித்து வந்தார்.

’என்னிடம் ஒரு கேள்வி கேளுங்கள்’ என்ற தலைப்பில் ரசிகர்களிடம் உரையாடி வந்த அவரிடம் ஒருவர், 'எனக்கு முத்தம் கொடுப்பிங்களா?' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் ஜான்வி, ’நோ’ என்று குறிப்பிட்டு அவர் முகக்கவசம் அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். மற்ற நடிகைகள்போல் இல்லாமல் ரசிகர்களின் இதுபோன்ற கேள்விக்கு, இவர் நகைச்சுவையாகப் பதிலளித்த விதம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated :Mar 21, 2021, 5:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details