தமிழ்நாடு

tamil nadu

உலகளவில் ரசிகர்களை தன்வசப்படுத்திய ஜகமே தந்திரம்!

By

Published : Jun 27, 2021, 3:45 PM IST

நடிகர் தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் வெளிநாட்டு பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.

ஜகமே தந்திரம்
ஜகமே தந்திரம்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் ஜூன் 17ஆம் தேதியன்று வெளியான 'ஜகமே தந்திரம்' திரைப்படம் 'நெட்பிளிக்ஸ்' ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

படம் வெளியான நொடியிலிருந்து, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தது. படம் வெளியான முதல் வாரத்தில், 'ஜகமே தந்திரம்' படத்தினை பார்த்தவர்களின் பிரமாண்ட எண்ணிக்கையில் பாதிப் பார்வையாளர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து பார்த்த பார்வையாளர்கள் ஆவர்.

உலகின் பல பகுதிகளிலிருந்து 'ஜகமே தந்திரம்' படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுக்க 12 நாடுகளில், டாப் டென் படங்களின் வரிசையில் இப்படம் இடம்பிடித்துள்ளது.

ஜகமே தந்திரம்

இத்திரைப்படம் மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா உள்பட ஏழு நாடுகளில் 'டாப்டென்' வரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. சுருளி கதாபாத்திரம் ஏற்று நடித்த தனுஷின், ரகிட ரகிட பாடல் உலகின் பல பகுதிகளை சென்றிருக்கிறது.

சுருளி (தனுஷ்) எனும், மதுரை லோக்கல் ரௌடி, இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல நிழல் உலக தாதா பீட்டர் என்பவனால் வேலைக்கு அழைக்கப்படுகிறான். அங்கு, சட்டவிரோதமாக துப்பாக்கிகளை கடத்தி பணம் சம்பாதித்து, தமிழீழ மக்களுக்காகப் போராடும் சிவதாஸ் என்பவரை கொலை செய்ய ஆணையிடப்படுகிறது.

ஜகமே தந்திரம்

அதன் பேரில் சில துரோகங்களை செய்த சிவதாஸை தனுஷ் கொலை செய்கிறார். சிவதாஸ் பற்றிய உண்மைகளை அறியாமல் அவரை கொலை செய்ததற்காக, அவரது குடும்பத்தினர் அவரை ஒதுக்கவே, பின்னர் ஈழ தமிழ் மக்களுக்காக போராடுகிறார்.

இத்தகைய கதையம்சம் கொண்ட இந்த ஆக்‌ஷன் திரைப்படம் உலகளவில் பெரும் பாராட்டையும், ஆதரவையும் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: தனுஷ் பட தயாரிப்பாளரின் புது முயற்சியால் ரசிகர்கள் குஷி!

ABOUT THE AUTHOR

...view details