தமிழ்நாடு

tamil nadu

தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல் - ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

By

Published : Jul 27, 2020, 3:47 PM IST

நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் இரண்டு பட அப்டேட்கள் நாளை வெளியாகவுள்ளது

தனுஷ்
தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நாளை (ஜூலை28) தனது 37ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார்.

இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் அப்டேட் ஒன்று நாளை வெளியாகவுள்ளது.

இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"ஜகமே தந்திரம் படத்தின் முதல் பாடலான ‘ரகிட ரகிட’ பாடல் நாளை (ஜூலை28) வெளியாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படம் கேங்ஸ்டர் கதை அம்சமாக உருவாகியுள்ளது.

அதேபோல் நேற்று தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் டைட்டில் லுக், மேக்கிங் வீடியோ நாளை (ஜூலை28) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தனுஷின் இரண்டு படங்களின் அப்டேட் நாளை வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details