தமிழ்நாடு

tamil nadu

ஓடிடியில் வெளியாகும் ஹிப்ஹாப் ஆதியின் 'சிவகுமாரின் சபதம்'

By

Published : Nov 23, 2021, 6:54 PM IST

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில், திரையரங்குகளில் வெளியான 'சிவகுமாரின் சபதம்' திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

v
v

தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர், 'சிவகுமாரின் சபதம்' என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகியாக மாதுரி என்பவர் நடித்துள்ளார்.

செப்டம்பர் 30ஆம் தேதி 'சிவகுமாரின் சபதம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. சத்யஜோதி பிலிம்ஸுடன் இணைந்து ஹிப்ஹாப் ஆதி இப்படத்தை தயாரித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் 'சிவகுமாரின் சபதம்' படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் டிசம்பர் 3ஆம் தேதி டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

இதையும் படிங்க: ரசிகர்களுடன் 'சிவகுமாரின் சபதம்' படம் பார்த்த ஆதி!

ABOUT THE AUTHOR

...view details