தமிழ்நாடு

tamil nadu

'இன்னொரு குழந்தையின் பிறப்புக்குத் இந்த பூமி தகுதியானதல்ல' - நடிகை சாய் பல்லவி!

By

Published : Jul 3, 2020, 4:02 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகை சாய் பல்லவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சாய் பல்லவி
சாய் பல்லவி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ட்விட்டரில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "மனித இனத்தின் மீது உள்ள நம்பிக்கை அதிவேகமாக குறைந்து வருகிறது. குரலற்றவர்களுக்கு உதவுவதற்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பலவீனமானவர்களை காயப்படுத்தி அரக்கத்தனமான இன்பத்திற்காக குழந்தைகளை கொள்கிறோம்.

இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்த்து எதுவும் செய்ய முடியாத ஒரு மோசமான, வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் வாழும் இந்த உலகம் இன்னொரு குழந்தை பூமியில் பிறப்பதற்கு தகுதி இல்லாத உலகம்.

இதுபோன்ற சம்பவங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகிதான் நீதி கிடைக்கும் என்கிற நிலை மாற வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details