தமிழ்நாடு

tamil nadu

டிஸ்னியின் அனிமேஷன் படத்தில் முதல் முறையாக மாற்று பாலின கதாபாத்திரம்

By

Published : Feb 25, 2020, 2:35 PM IST

எல்ஜிபிடிக்யூ (LGBTQ) கதாபாத்திரத்தை முதல் முறையாக ஆன்வார்டு என்ற அனிமேஷன் படத்தில் உருவாக்கியுள்ள டிஸ்னி நிறுவனம், அந்த கேரக்டர் குறித்த பின்னணி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

LGBTQ character in Disney's  Onward
Onward animation movie

ஏற்கெனவே, எல்ஜிபிடிக்யூ - LGBTQ (தன்பாலின ஈர்ப்பு, மாற்று பாலின ஈர்ப்பு, திருநங்கை) கதாபாத்திரங்களை தங்களது லைவ்-ஆக்‌ஷன் அனிமேஷன் திரைப்படங்களில் காட்டியுள்ள டிஸ்னி நிறுவனம், தற்போது அனிமேஷன் வடிவில் காட்டவுள்ளது.

இறந்துபோன தந்தையை அவர் கொடுத்த மாயாஜாலம் மிக்க தடியால் உயிர்த்தெழ வைக்கும் முயற்சியில், ஐயன் லைட்ஃபூட், பேர்லி லைட்ஃபூட் என இரு சகோதரர்கள் ஈடுபடும்போது நிகழும் சம்பவங்களை நகைச்சுவையுடன் கூறும் படமாக ஆன்வார்டு திரைப்படம் உருவாகியிருக்கிறது.

படத்தின் பிரதான கதாபாத்திரங்களாகத் திகழும் ஐயன் லைட்ஃபூட்-க்கு டாம் நடிகர் ஹாலாண்ட், பேர்லி லைட்ஃபூட்-க்கு நடிகர் கிறிஸ் பிராட் குரல் கொடுத்துள்ளனர்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், படம் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details