தமிழ்நாடு

tamil nadu

ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குனர் ஷங்கர் மகன்?

By

Published : Jan 27, 2022, 1:43 PM IST

இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான ஷங்கர், தனது மகன் அர்ஜித்தை சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹீராவாக அறிமுகமாகும் ஷங்கர் மகன்?ஹீராவாக அறிமுகமாகும் ஷங்கர் மகன்?
ஹீராவாக அறிமுகமாகும் ஷங்கர் மகன்?

கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான 'சாமுராய்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி சக்திவேல். இவரது இயக்கத்தில் வெளியான 'காதல்', 'கல்லூரி', 'வழக்கு எண் 18 / 9 ' ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

வழக்கு எண் 18 / 9 படத்திற்காக தேசிய விருது உள்பட பல விருதுகளைப் பெற்றார். இவர் இயக்குநர் ஷங்கரிடமே துணை இயக்குநராக பணியாற்றினார். இந்நிலையில் இவரது இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த திரைப்படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படமானது பரத் நடிப்பில் வெளியான 'காதல்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. காதல் திரைப்படத்தை தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் ஷங்கரே தயாரித்திருந்தார்.

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'விருமன்' திரைப்படத்தில் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி அறிமுகமாகிறார். மகளைத் தொடர்ந்து, மகனையும் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தும் ஷங்கரின் முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்பு குவிந்து வருகிறது.

இதையும் படிங்க:தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு வைரமுத்து கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details