தமிழ்நாடு

tamil nadu

பா. ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ்?

By

Published : Jul 22, 2021, 2:55 PM IST

பா. ரஞ்சித் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் - தனுஷ்
பா.ரஞ்சித் - தனுஷ்

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' நேற்றிரவு (ஜூலை 21) ஓடிடி தளத்தில் வெளியானது. ஆர்யா நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஏற்கனவே தனுஷ் கார்த்திக் நரேன், செல்வராகவன் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார். அதுதவிர புதிய படங்களையும் கைவசம் வைத்துள்ளதால், பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:‘டாணாக்காரன்’ விக்ரம் பிரபு சினிமா கேரியரில் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் - இயக்குநர் தமிழ்

ABOUT THE AUTHOR

...view details