தமிழ்நாடு

tamil nadu

தொலைக்காட்சி ஒளிபரப்பில் தனுஷ் படம் செய்த சாதனை!

By

Published : May 9, 2020, 11:10 AM IST

சென்னை: நடிகர் தனுஷ் திரைப்படங்கள் வெள்ளித்திரையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

தனுஷ்
தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ‘பட்டாஸ்’.

இத்திரைப்படம் மே ஒன்றாம் தேதி பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரபானது. முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இப்படம் 1,31,49,000 பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்த படம் என்ற சாதனையையும் 'பட்டாஸ்' திரைப்படம் நிகழ்த்தியிருக்கிறது.

இதுகுறித்து சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் கூறுகையில், “எந்த வகை படமாக இருந்தாலும், குடும்பம் முழுவதும் அமர்ந்து பார்க்க சிறந்த பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்பதுதான், எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தாரக மந்திரம்.

சர்வதேச ரசிகர்களையும் மகிழ்விக்கும் விதமான நல்ல படங்களைத் தர வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். ’பட்டாஸ்’ படத்தில் இரட்டை வேடங்களில் தனுஷ் அற்புதமாக நடித்திருந்தது, படத்தின் சிறப்பம்சமாக அமைந்ததுடன், அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இந்த வெற்றிச் சாதனையை எங்களுக்கு பரிசாகக் கொடுத்த, பட்டாஸ் படத்தில் நடித்த நடிகை, நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:போஸ்ட் புரொடக்‌ஷன் பணிக்கு அனுமதி: திரைப்பிரபலங்கள் நன்றி

ABOUT THE AUTHOR

...view details